இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏழு விதமான ஆச்சரியங்கள்

படம்
ஏழு விதமான ஆச்சரியங்கள்  1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் கடமைகளைச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்...   2. ஒரு நாளில் உலகில் காணும் பொருள்கள் அனைத்தும் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், அந்த பொருள்களின் மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்...   3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்...   4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன்,அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...  5. நரகம் போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் மேலும் மேலும் பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்...   6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்...   7. சுவர்க்கம்* போன்ற மன நிறைவான வாழ்க்கையை பற்றி அறிந்த மனிதன், புண்ணியங்களை ...

சப்தகன்னியர்..!

படம்
சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாக உள்ள கிராம பெண்தெய்வ வழிபாடாகும். சப்தகன்னியர் வழிபாடானது பழங்காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது என்பதனை கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் அறியலாம். காளிதாசர் தனது குமார சம்பவத்தில் சப்தகன்னியர்களை சிவபெருமானின் பணிபெண்டிர் என்று குறிப்பிடுகின்றார். சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானின் திருவுலாவின்போது விநாயகர் மற்றும் வீரபுத்திரரின் காவலோடு சப்தகன்னியர்கள் நடனமாடி செல்வதாக பாடல் பாடியுள்ளார். சப்தகன்னியர்கள் சிவலாயங்களில் தெற்குப்பகுதிகளிலும், கிராமங்களின் ஈசானப்பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகிலும், மலையடிவாரங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் சிலைவடிவில் காணப்படுகின்றனர். இவர்கள் தனித்தனியாக சிலைவடிவிலும், ஒரே கல்லில் ஏழு உருவங்கள் செதுக்கப்பட்டு ஒரே சிலையாகவும், ஏழு தனித்தனி பீடங்களாகவும், ஒரே...