இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்

படம்
  இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே மிகவும் சிறப்பானது வேதங்கள். வேதங்கள் நான்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த வேதங்கள் தோன்றிய விதம், அவைகளின் தொன்மை, மற்றும் அவை உலகிற்கு வழங்கும் சாரம் ஆகியவற்றை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உலக சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுள்ளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி ஆகும். வேதங்கள் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக வந்துள்ளன. இவை சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வேதங்கள் வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக் கூறபடுகின்றன.. வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. அவை ரிக், யஜூர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் ஆகும். வேதங்களை “மறை” என தமிழில் கூறுவர். இவை நான்மறை என்றும் கூற...