இந்து மதம்

இந்து சமயப் பிரிவுகள் இந்து மதத்தில் நான்கு வேதங்கள், 108 உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், எண்ணற்ற மதக் கோட்பாடுகள், ஸ்தோத்திரங்கள், துணை நூல்கள், தெளிவுரை நூல்கள், நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. இந்து மதம் ஆறு பிரிவுகள் 1:- காணாபத்தியம் : விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம். 2:- சைவம் : ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவத்தை; தெய்வங்களின் தலைவனை, பெரியகடவுளாகிய மஹாதேவனை, சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம். சைவம் சிவனைமுழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவத்தின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பப்டது. யார் சைவர் எனப் போற்றப் படுபவராவார்? 1 திருநீறு அணிதல். 2 உருத்திராக்கம் அணிதல். 3 திருவைந்தெழுத்து மந்திரமாகிய நமசிவய எனும் மந்திரத்தை எப் பொழுதும் மனதில் இருத்தி தியானித்தல். 4 சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குதல். 5 தாய்...